Thursday, 3 December 2015

சென்னையில் வெள்ள பாதிப்பு-உதவும் அதிரை சுமுக நிர்வாகி

சென்னையில் தொடர்ந்து மூன்று வாரங்களுக்கு மேலாக பெய்த கன மழையால்  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் முறையான வடிகால் வசதி இல்லாதா காரணத்தினால் ஆயிரம்விளக்க, அடையார்,தீநகர்,வேளச்சேரி,தாம்பரம்,போன்ற இடங்கள் வெள்ளம் சூழ்ந்து காணபடுகிறது

இந்நிலையில் அதிரை சுகாதார முன்னேற்ற கழக  நிர்வாகி தமீம் அவர்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட ஆயிரம் விளக்கு,கிரீம்ஸ் ரோடு போன்ற பகுதியில்  தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.மேலும் இவர் அறிமுகம் உள்ள உள்ளூர் நபர்கள் வெளியூர் வாசிகளிடம் பொருள்கள் மற்றும் உணவுகளை  சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார்.

குறிப்பு:உதவும் நல்லுள்ளங்கள் இவரை தொடர்பு கொண்டு பொருள்கள் வழங்கலாம்
9500694003








Sunday, 25 October 2015

பசுமை புரட்சியில் அதிரை சுகாதார முன்னேற்ற கழகம்

அதிரை பொதுமக்களின் சுகாதாரத்தை முன்னிலைப்படுத்தி அதிரை சமூக ஆர்வலார்களால் உருவக்கபட்டு செயல்பட்டு வரும் அதிரை சுகாதார முன்னேற்ற கழகம் (அதிரை சுமுக) தற்போது  மூன்று மாதங்களுக்கு மேலாக  அதிரை பகுதி முழுவதும் பசுமை புரட்சியாக 10க்கும்  மேற்பட்ட இளைஞர்கள் இரவு பகல் பாராமல் பெரும்பான்மையாக 300க்கும் மேற்பட்ட மரங்களை புதுமனை தெரு,சிஎம்பி லைன்,நடுத்தெரு,கடற்கரை தெரு,மெயின் ரோடு ஆகிய பகுதியில் நட்டு உள்ளனர்.

மேலும் தற்போது மீதம் உள்ள தெருக்களுக்கு மரங்கள் நட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.தற்போது அதிரை பகுதியில் பசுமை புரட்சி ஏற்பட்டு உள்ளதை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பொதுமக்கள் தெருவிக்கின்றனர். மேலும் இந்த முயற்சிக்கு அணைத்து தெரு பொதுமக்களும் ஆதரவு அளிக்குமாறும் அமைப்பு சார்பில் கேட்டுகொள்ளப்டுகிறது.      

நீங்கள் பார்க்கும் காட்சி அதிரை சுகாதார முன்னேற்ற கழகம் சார்பில் அதிரை காவல்துறை எதிரில் அதிரை பேரூர் மன்ற தலைவர் அஸ்லம் அவர்கள் மரம் நட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் 

நீங்கள் பார்க்கும் காட்சி நடுத்தெரு பகுதியில் சுமுக அமைப்பால் நட்டப்பட்ட மரங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிற உரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 

செக்கடிமேட்டு பகுதியில் மரம் நட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் 

நீங்கள் பார்க்கும் காட்சி புதுமனை தெரு முழுவதும் மரம் நட்டப்பட்டு மஞ்சள் நிற உரை  அமைக்கப்பட்டு உள்ளது. 
adiraixpress

இணையத்தில் வந்த செய்தி

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் அதிரையை சேர்ந்த சுமுக தன்னார்வலர்கள் இணைந்து கடந்த சில மாதங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரையின் அனைத்து பகுதியிலும் குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, கடற்கரைத்தெரு, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரையில் 326 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரக்கன்றுகளை ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றை சுற்றி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தை அதிரையின் பிற பகுதிகளிலும் குறிப்பாக மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், ஆதம் நகர், நெசவுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்த இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் பணி குறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழகத்தின் முன்னோடி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இந்த பணிகளை கடந்த சில மாதங்களாக செயல்படுத்தி வருகிறோம். இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மிகுந்த வரவேற்பும், ஆதரவும் அளித்து வருகின்றனர்.

மரக்கன்றுகள் நடப்பட்டதோடு விட்டுவிடாமல் மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களை தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த பணி தொடர்பாக அதிரை பொதுநல விரும்பிகளிடமிருந்து ஆதரவும், சிறந்த ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது' என்றார்.
 
 
 
 
adirainews

Thursday, 8 October 2015

அதிரை சுமுக இணையத்தளம் அறிமுகம்

அதிரையின் சுகாதாரம்,பசுமையை  வலியுறுத்தி நமது ஊர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த இணையத்தளம் செயல்படும்.இந்த தளத்தில் முழுக்க முழுக்க அதிரை பசுமை நிலை அடைய வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் திறக்கப்பட்டு சமூக ஆர்வலர்களால் நிர்வாகிக்கப்படும் என்பதனை உங்களுக்கு தெரியபடுத்துகிறோம்.